செலவு குறைக்கப்பட்டதால் எல்ஆர்டி3க்குப் பச்சைக் கொடி

எல்ஆர்டி3  திட்டத்தைத்   தொடர்வதற்கு  அரசாங்கம்   பச்சைக்  கொடி   காட்டியுள்ளது. அத்திட்டத்துக்கான    செலவு  ரிம16.63 பில்லியனுக்குக்   குறைக்கப்பட்டதை    அடுத்து    அதைத்   தொடர  அரசாங்கத்தின்   அனுமதி  கிடைத்துள்ளது.

செலவு   47 விழுக்காடு   குறைக்கப்பட்டது    என்றும்   இதனால்  நாட்டுக்கு  ரிம15.02  பில்லியன்  மிச்சப்படும்    என்றும்    நிதி   அமைச்சர்   லிம்   குவான்    எங்   கூறினார்.  அந்த  37கிமீ   இரயில்   திட்டம்   குறித்து   மறுபடியும்   விவாதிக்கப்பட   வேண்டும்  என்றும்    செலவைக்  குறைக்க   வேண்டும்   என்றும்    அவரது  அமைச்சு   தொடர்ந்து   கூறிவந்தது.

செலவைக்  குறைக்கும்   வேலைகளால்    அத்திட்டம்  முழுமை  பெறுவதற்கு  மேலும்   நான்கு  ஆண்டுகள்  ஆகலாம்  என்றும்    அறிவிக்கப்பட்டுள்ளது.

“நேற்று  அமைச்சரவைக்   கூட்டத்தில்  எல்ஆர்டி3 திட்டத்தை  ரிம16.63 பில்லியன்  செலவில்   தொடர்வதற்கு   ஒப்புதல்   கொடுக்கப்பட்டது. இப்போது  எல்ஆர்டி3க்கான  செலவு  ரிம31.65 பில்லியனிலிருந்து   ரிம16.63 பில்லியனாகக்  குறைக்கப்பட்டுள்ளது. இதன்வழி  ரிம15.02 பில்லியன்  மிச்சமானது”,  என  லிம்  குறிப்பிட்டார்.