சட்டத்துறையில் முஸ்லிம்- அல்லாதார் ஆதிக்கத்தால் முஸ்லிம்கள் அதிருப்தியாம் : பாஸ் கூறுகிறது

பக்கத்தான்    ஹரப்பான்     நாட்டின்   சட்டத்துறையில்   செய்துள்ள   நியமனங்களைக்   கண்டு   முஸ்லிம்கள்   அதிருப்தியுற்றிருப்பதாக   பாஸ்  தகவல்   தலைவர்   நஸ்ருடின்   ஹசான்  கூறினார்.

மூத்த   நீதிபதி   ரிச்சர்ட்  மலஞ்சோம்     நாட்டின்   தலைமை    நீதிபதியாகவும்   லியு  வுய்  கியோங்  சட்ட  அமைச்சராகவும்   டோம்மி   தாமஸ்   சட்டத்துறைத்    தலைவராகவும்   நியமிக்கப்பட்டிருப்பதைத்தான்     நஸ்ருடின்  குறிப்பிடுகிறார்.

நாட்டின்  நீதி  மற்றும்   சட்டத்துறையில்  மூன்று  முக்கிய   பொறுப்புகளும்  முஸ்லிம்-அல்லாதார்   கைகளில்   உள்ளன.

1963க்குப்  பிறகு  ஒரு  முஸ்லிம்-அல்லாதாரைத்    தலைமை   நீதிபதியாக   நியமித்து    ஹரப்பான்  ‘சாதனை’   புரிந்துள்ளது     என்றாரவர்.

மலஞ்சோம்  முக்கிய    வழக்குகளில்    இஸ்லாத்துக்குச்   சாதகமாக    நடந்துகொண்டதில்லை   என்றும்   அவர்  கூறிக்கொண்டார்.

“முஸ்லிம்கள்  இன்னும்  என்னவெல்லாம்   காண  வேண்டி  இருக்குமோ?  பிஎன்  ஆட்சிக்காலத்திலேயே  இஸ்லாம்  ஆட்டம்  கண்டிருந்தது.  இப்போது  அது  இன்னும்  மோசமான   நிலையை   நோக்கிச்   சென்று  கொண்டிருக்கிறது.

“முஸ்லிம்கள்   புலியிடமிருந்து   தப்பி    முதலையின்  வாயில்   சிக்கிக்  கொண்டார்களா?,  என்றவர்   வினவினார்.