கோபிந்த்: ஸக்கீர் நாய்க் விவகாரத்தை அமைச்சரவை விவாதித்தது

 

சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸக்கீர் நாய்க்கின் விவகாரம் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது என்று தொடர்புகள் மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த சிங் இன்று கூறினார்.

இந்திய அரசாங்கம் ஸக்கீரை திருப்பி அனுப்புவதற்கான சரியான சட்ட விளக்கத்தை அளித்தால், அரசாங்கம் சட்ட ஆளுமையைப் பின்பற்றி அதற்கேற்ப நடந்து கொள்ளும் கடப்பாட்டை கொண்டுள்ளது என்று கூறினார்.

எங்களைப் பொறுத்த வரையில், இந்தியா அதன் கோரிக்கைக்கு வலுவான ஆதாரம் இருப்பதாகக் கூறுகிறது. இப்போது செய்ய வேண்டியதெல்லாம், இந்தியா அதன் ஆதாரங்களை முன்வைக்க வேண்டியதுதான் என்று கூறிய கோபிந்த், இந்தியா அதன் தரப்பு வாதத்தை அளித்தவுடன், அது ஆராயப்பட்டு அவரை திருப்பி அனுப்புவதா இல்லையா என்ற முடிவு எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இதுதான் நேற்று நாங்கள் அமைச்சரவையில் விவாதித்தது என்றாரவர்.

இது குறித்த கருத்தைப் பெற மலேசியாகினி இந்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறது.