முகைதின் மருத்துவ விடுப்பில்; மகாதிர் உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார்

 

உள்துறை அமைச்சர் முகைதின் யாசின் மருத்துவ விடுப்பில் இருப்பதால், பிரதமர் மகாதிர் உள்துறை அமைச்சர் பொறுப்பைத் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

கணையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் அறுவைச் சிகிட்சையைத் தொடர்ந்து முகைதின் மருத்துவ விடுப்பில் இருக்கிறார். அடுத்த மாதம் அவர் மீண்டும் பணியைத் தொடங்குவார்.

முகைதினுக்கு செய்யப்பட்ட அறுவைச் சிகிட்சை வெற்றிகரகமான முடிந்தது என்று கூறிய முகைதினின் ஊடகச் செயலாளர் ஹபிஸ் அப்துல் ஹாலிம், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற விருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதிமொழி நிகழ்ச்சியில் முகைதின் கலந்துகொள்ள இயலாது என்றார்.

தற்போது மகாதிருக்கு எந்த ஓர் இலாகா பொறுப்பும் கிடையாது, ஏனெனில் பிரதமர் இதர இலாகாகளுக்கு பொறுப்பேற்பதை பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கை தடை செய்கிறது.

மகாதிர் பிரதமராக இருந்த முதல்தவணையின் போது 1986-1999 ஆண்டுகளில் உள்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.