பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.
மலேசியா இப்போது ஜனநாயக முதிர்ச்சி பெற்ற நாடு என்ற இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கூறிய வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா, அந்த இலக்கை அடைவதற்கு ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது என்றார்.
அரசாங்கம் வெளிப்படையாக நடந்து கொள்கிறது, பத்திரிகைச் சுதந்திரத்தை ஊக்குவிக்கிறது என்றாரவர்.
“செய்தியாளர்கள் பிஎம்ஓ(பிரதமர் அலுவலகம் அல்லது மற்ற அமைச்சர்கள் விளக்கம் கேட்கக் கூப்பிடுவார்கள் என்று கவலைப்பட வேண்டியதில்லை”, என்று அமைச்சர் கூறினார்.