வாகன எண் பட்டை விற்பனை மூலம் பெர்லிஸ் ஆர்டிடி வருமானம் ரிம45 மில்லியன்

பெர்லிஸ்   சாலைப்  போக்குவரத்துத்  துறை  2015-இலிருந்து   கடந்த   ஆண்டுவரை    வாகன   எண்   பட்டைகளை   ஏலத்தில்   விட்டதன்  மூலம்  ரிம45.17 மில்லியனை   வருமானமாகப்  பெற்றது.

கடந்த  ஆண்டு   விற்கப்பட்ட   ‘RR’  தொடர்   எண்கள்  மூலம்தான்   அதிக  பணம்,  ரிம12.2  மில்லியன்,   கிடைத்ததாக    அதன்   இயக்குனர்  ஷாருல்  மாட்   அலி  கூறினார்.

“பெர்லிஸ்  ஆர்டிடி  வரலாற்றிலேயே  RR6-தான்   மிக   உயர்ந்த  விலைக்கு   ரிம459,800-க்கு   ஏலம்  போனது”,  என்றாரவர்.

இவ்வாண்டில்   வாகன  எண்  பட்டைகள்  விற்பனை  வழி  பெர்லிஸ்   ஆர்டிடிக்கு   இதுவரை   கிடைத்துள்ள  வருமானம்  ரிம12.07 மில்லியன்.