மக்களவைத் தலைவர் நியமனத்தை எதிர்த்து அம்னோ, பாஸ் எம்பிகள் வெளிநடப்பு

இன்று   முகம்மட்  அரிப்   முகம்மட்  யூசுப்    மக்களவைத்   தலைவராக  நியமிக்கப்பட்ட  முறைக்கு    எதிர்ப்புத்    தெரிவித்து   அம்னோ   மற்றும்  பாஸ்   எம்பிகள்   மக்களவையிலிருந்து   வெளிநடப்பு   செய்தனர்.

நாடாளுமன்றக்  கூட்டம்  தொடங்குவதற்குமுன்    அந்த   எம்பிகள்  எழுந்து    மக்களவைத்   தலைவர்   நியமனம்   குறித்து   14   நாள்களுக்கு  முன்பே   நாடாளுமன்றத்துக்குத்    தெரிவிக்கப்பட    வேண்டும்    என்ற   விதிமுறை   பின்பற்றப்பட்டதா    என்று   கேள்வி   எழுப்பினர்.

மக்களவைச்   செயலாளர்   ரோஸ்மி  ஹம்சா,   பிரதமர்     டாக்டர்    மகாதிர்    முகம்மட்     அவைத்   தலைவர்    வேட்பாளராக  அரிப்பை  குறிப்பிடும்   கடிதம்   ஜூலை 2ஆம்  நாளே   கிடைக்கப்பெற்றதாகக்  கூறியதை    அவர்கள்   ஏற்கத்   தயாராக   இல்லை.  இதனால்   அவையில்   அமளி   ஏற்பட்டது.

எதிரணி  எம்பிகள்  ‘தீபு, தீபு’   என்று   உரக்கக்   கத்தினர்.

அதையும்  மீறி   அரிப்   மக்களவைத்    தலைவராக   பதவி  உறுதிமொழி   எடுத்துக்கொண்டார். எதிரணி   எம்பிகள்   வெளிநடப்பு   செய்தனர்.

எதிரணி   எம்பிகள்   வெளிநடப்பு   செய்தாலும்   அனிபா  அமான் (அம்னோ-கிமானிஸ்),  கைரி  ஜமாலுடின் (அம்னோ-ரெம்பாவ்)   ஆகிய   இருவர்   மட்டும்   அவையிலேயே   தங்கி  விட்டதாக    தெரிகிறது.