சின் தோங், வேதா மற்றும் ராஜா பாரின் செனட்டராகப் பதவி ஏற்பவர்களில் அடங்குவர்

 

நாளை காலை எட்டு செனட்டர்கள் நாடாளுமன்றத்தில் செனட்டர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வர்.

அவர்களில் டிஎபியின் லியூ சின் தோங், அமனாவின் ராஜா கமருல் பாரின் ஷா ராஜா அஹமட் மற்றும் ஹிண்ட்ராப்பின் பி. வேதமூர்த்தியும் அடங்குவர்.

மலேசியாகினி பார்த்துள்ள நாடாளுமன்ற அழைப்பிதழ்கள்படி, இம்மூவரும் பெடரல் அரசாங்கத்தால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்கள் பேரரசரால் நியமிக்கப்படுவர்.

இன்னும் மூவர் மத்திய அரசின் பங்கு வீதப்படி நியமிக்கப்படுவர். அவர்கள் இஸ்மாயில் இப்ராகிம், முகமட் ராட்ஸி முகமட் ஜிடின் மற்றும் மார்ஜூகி யாயா.

புதிய அமைச்சர் மற்றும் துணை அமைச்சர்கள் நாளை மாலை இஸ்தானா நெகாராவில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வர்.

அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள ஆறு செனட்டர்களிலிருந்து நியமிக்கப்படுவர். தற்போது 27 அமைச்சர்களும் 23 துணை அமைச்சர்களும் இருக்கின்றனர்.