விற்பனை, சேவை வரி(எஸ்எஸ்டி) அமல்படுத்தப்படும்போது பொருள் விலைகளும் சேவை விலைகளும் கிடுகிடுவென உயரும் என்கிறார் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.
“எஸ்எஸ்டி அமல்படுத்தப்படும்போது பொருள் மற்றும் சேவை விலைகளும் முறையே 10விழுக்காடும் 6விழுக்காடும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் கவலைப்படுகிறார்கள்.
“விலைகள் உயருமானால் வாழ்க்கைச் செலவினம் உயரும். அதன் விளைவு மோசமாக இருக்கும்”, என நஜிப் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
எஸ்எஸ்டி வரிவிதிப்பு முறையை நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்று அறிவித்தார்.
இப்புதிய வரி, செப்டம்பர் மாதத்திலிருந்து நடப்புக்கு வரும். எஸ்எஸ்டி ஏற்கனவே நஜிப் அரசாங்கத்தில் இருந்த பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)க்குப் பதிலாகக் கொண்டுவரப்படுகிறது.