மலேசிய ஹிந்த்ராப் சங்க(இந்துராப்)த் தலைவர் பி.வேதமூர்த்தி, முன்பு பிஎன் அரசாங்கத்தில் செய்ததைவிட பக்கத்தான் ஹரப்பான் அரசில் நற்பணி ஆற்றிட முடியும் என நம்புகிறார்.
முன்பு அரசாங்கத்தில் இருந்ததைவிட இப்போது இருப்பது திருப்தி அளிப்பதாக அவர் கூறினார்.
“கொள்கை காரணமாக முன்பு நான் விலகினேன். ஏனென்றால் (அப்போதைய பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை”, என செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டதும் வேதமூர்த்தி கூறினார்.
வேதமூர்த்தியும் இதர எழுவரும் இன்று செனட்டர்களாக நியமனம் செய்யப்பட்டார்கள்.
வேதமூர்த்தி ஒரு முழு அமைச்சராக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரப்பான் அரசாங்கம் இந்தியர்களும் ஓரங்கட்டப்பட்ட மற்ற சமூகத்தினரும் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் என வேதமூர்த்தி நம்புகிறார்.