அண்மையில் வெளியான ஒரு செய்தி இந்தியச் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி பரவலான வகையில் கையாடல் செய்யப்பட்டதாக கூறுகிறது. இது முன்னாள் பிரதமர் துறையின் கீழ் பெமாண்டு என்று அழைக்கப்பட்ட அரசாங்கத்தின் உருமாற்ற செயல்திட்ட பிரிவில் பணியாற்றிய இரவீந்திரன் தேவகுணம் அவர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கோடிகாட்டப்பட்டது.
இதில் உண்மை உள்ளதா என்பதை அலச மலேசியஇன்று ஓர் ஆய்வை துவக்க உள்ளது.
கடந்த பத்தாண்டுகளில், அரசாங்கம் இந்திய சமூகம் நலன் கருதி அளித்த கோடிக்கணக்கான நிதி எப்படிக் கையாளப்பட்டது, யாரிடம் கொடுக்கப்பட்டது, இதில் முறைக்கேடுகள் உள்ளனவா என்பதை மக்களின் முன் நிறுத்த மலேசியஇன்று இதில் சார்ந்தவர்களிடம் வினவும். அதோடு அரசாங்கதிடமும் இவை சார்ந்த தகவல்களை முறைப்படி பெற முயலும்.
குறிப்பாக சீட் (SEED), செடிக் (SEDIC), மைக்கி (MAICCI), மைக்கா ஹோல்டிங்ஸ் விற்பனை (MAIKA), இரயில்வே சார்ந்த குத்தகை, தமிழ்ப்பள்ளிகள் குத்தகை போன்றவை இந்த அலசலில் அடங்கும்.
முன்னாள் பிரதமரின் ஊழல் தலைவிருத்தாடியதால், அவருடன் இருந்தவர்கள் விசாரணையில் இருந்து தப்பி இருக்கலாம்.
இவை சார்பாக கிடைக்கும் விபரங்களின் அடிப்டையில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்படும்.