பயனீட்டாளர்கள் 16விழுக்காடு விற்பனை, சேவை வரி (எஸ்எஸ்டி) செலுத்த வேண்டி இருக்காது என புத்ரா ஜெயா கூறி வருவதை சுங்கத்துறை தலைமை இயக்குனர் டி.சுப்ரமணியமும் வழி மொழிந்துள்ளார்.
எஸ்எஸ்டியின்கீழ் நான்கு வகை வரிகள் உள்ளன என்றும் நான்கும் ஒருசேர விதிக்கப்படாது என்று சுப்ரமணியம் கூறினார்.
“பெரும்பாலான பொருள்களுக்குச் சுழியம் விழுக்காடு வரிதான். சிலவற்றுக்கு 5 விழுக்காடு சிலவற்றுக்கு 10 விழுக்காடு.
“சேவைகளுக்கு ஆறு விழுக்காடு வரி……இவற்றைச் சேர்த்துக் கணக்கிடக் கூடாது”, என்றவர் செய்தியாளர்களிடம் கூறினார்.