நாடாளுமன்றத்தில் இல்லாததற்காக ஹரப்பான் அமைச்சர்களையும் துணை அமைச்சர்களையும் இஙா கண்டித்தார்

 

நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தின் போது அவையில் இல்லாததற்காக மக்களைத் துணைத் தலைவர் இஙா கோர் மிங் ஹரப்பான் அமைச்சர்களையும் துணை அமைச்சர்களையும் கண்டித்தார்.

அவர்கள் அவையில் இல்லாதது முறையற்றதாகும் என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

பெருமளவில் ஹரப்பான் அமைச்சர்கள் நேற்றையக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நேற்று மாலை அமைச்சரவையின் வாராந்திர கூட்டம் நடைபெற்றது.

இருந்தாலும், துணை அமைச்சர்கள் கலந்துகொள்ளாததற்கு இது காரணமாகாது, ஏனெனில் துணை அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்றாரவர்.

நேற்று, எதிரணி பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமைச்சரவைக் கூட்டம் இனிமேல் வெல்ளிக்கிழமை நடைபெறும். ஆகவே, இது போன்ற சம்பவம் இனிமேல் இடம்பெறாது என்று தாம் நம்புவதாக கூறிய இஙா, இவ்விவகாரத்தை தமது கவனத்திற்கு கொண்டு வந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.