14வது பொதுத் தேர்தலின்போது பூச்சோங்கில் வாக்களிப்பு மையம் ஒன்றைத் தாக்க முயன்றதற்காகக் கைது செய்யப்பட்ட சிலாங்கூர் குடும்பத் தலைவி நாட்டின் முதலாவது பெண் ஐஎஸ் தலைவர் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
நேற்று உத்துசான் மலேசியாவிடம் புக்கிட் அமான் சிறப்புப் போலீஸ் பிரிவின் பயங்கரவாத-எதிர்ப்பு உதவி இயக்குனர் ஆயுப் கான் மைடின் பிச்சை இதை உறுதிப்படுத்தினார்.
“இந்தோனேசியா முதலிய நாடுகளில் செய்யப்படுவதுபோல் இங்கும் பெண்கள் முன்னணியில் இருந்து செயல்பட அனுப்பப்படுகிறார்கள். முன்பு (மலேசியாவில்) பெண்கள் ஐஎஸ்ஸில் சேரும் கணவன்மாருக்கு நிதியுதவி மட்டுமே செய்வார்கள்.
“இந்தப் போக்கு வளராமல் தடுக்க இடைவிடாத கண்காணிப்பு அவசியம்.
“2012 -இலிருந்து ஐஎஸ் தொடர்புள்ள 43 பெண்கள் நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்”, என்றாரவர்.