தன்னியக்க வாக்காளர் பதிவு முறை, வாக்களிக்கும் வயது குறைப்பு பற்றி ஆராயப்படுகிறது

தேர்தல்    ஆணையம் (இசி)  தன்னியக்க   வாக்காளர்   பதிவுமுறை   அமலாக்கம்   குறித்தும்   வாக்களிப்பு   வயதைக்   குறைப்பது  பற்றியும்   ஆராய்ந்து   வருகிறது.

இதன்  தொடர்பில்   நடப்பில்  உள்ள   சட்டங்களில்   திருத்தம்    செய்ய   வேண்டியிருப்பதாகவும்   பதிவுமுறையில்   செய்யப்படவுள்ள  மாற்றங்களை  விளக்க   வேண்டியிருக்கும்  என்றும்  பிரதமர்துறை   அமைச்சர்   லியு  வூய்  கியோங்  கூறினார்.

“என்னென்ன  சீரமைப்புகள்   முன்மொழியப்படுகின்றன   அவற்றை  சட்டத்துக்கு  ஏற்ப   வெற்றிகரமாக  அமல்படுத்த  வேண்டியது  இசியின்  பொறுப்பு”,  என  லியு  கூறினார்.

தகியுடின்  ஹசன் (பாஸ் -கோத்தா   பாரு)  கேட்டிருந்த   கேள்விக்குப்  பதிலளித்தபோது   அவர்  இவ்வாறு   கூறினார்.

பக்கத்தான்  ஹரப்பானின்   தேர்தல்    அறிக்கை   வாக்களிப்பு    வயது   21-இலிருந்து  18ஆகக்  குறைக்கப்படும்   என்று  கூறியது.

அதே  போன்று   ஒருவர்   வாக்களிக்கும்   வயதை   எட்டியதும்   தேசிய  பதிவுத்  துறையில்  உள்ள   தகவலின்   அடிப்படையில்    அவர்   தானாகவே   வாக்காளராகப்  பதிவு   செய்யப்படுவார்  என்றும்  அந்தத்   தேர்தல்   அறிக்கை  கூறியிருந்தது.

மேற்சொன்ன  இரண்டு   பரிந்துரைகளும்   அமல்படுத்தப்படுமா   என்று   அறிந்துகொள்ள   தகியுடின்  விரும்பினார்.