சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தலில் முக்கோணப் போட்டி

சுங்கை காண்டிஸ் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் நியமனம் முடிவுற்றது.

இந்த இருக்கைக்கு மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்று தேர்தல் அதிகாரி அறிவித்தார். அவர்கள் முகமட் ஸாவாவி அஹமட் மக்னி (பக்கத்தான் ஹரப்பான்), லோக்மான் நூர் ஆடம் (பிஎன்) மற்றும் மூர்த்தி கிருஷ்ணசாமி (சுயேட்சை).

சமய ஆசிரியரான ஸாவாவி பிகேஆரின் சமய புரிந்துணர்வு மற்றும் இணைத்தல் பிரிவின் செயலாளர் ஆவார். லோக்மான் அம்னோ உச்சமன்ற உறுப்பினர்.

சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல் இரண்டு கூட்டணிகளுக்கிடையிலான பலப் பரிட்சையாகக் காணப்படுகிறது.

மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இத்தொகுதியை கடந்த பொதுத் தேர்தலில் கைப்பற்றியது. இம்மாதத் தொடக்கத்தில் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாபியி புற்று நோயால் பாதிக்கப்பட்டு காலமானத் தொடர்ந்து இத்தொகுதி காலியாகியது.

பாஸ் போட்டியில் இறங்கவில்லை. ஆனால், அது அம்னோவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றாகாது என்று அது கூறிக்கொண்டுள்ளது.

ஸாவாவி மற்றும் லோக்மான் ஆகியோருடன் சுயேட்சை வேட்பாளர் மூர்த்தி கிருஷ்ணசாமியும் களமிறங்கியுள்ளார். ஆக, இத்தொகுதியில் முக்கோணப் போட்டி நடைபெறும்.

இந்த இடைத் தேர்தல் வாக்களிப்பு ஆகஸ்ட் 4 இல் நடைபெறும்.