பாரிசான் நேசனல்(பிஎன்), அதன் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான மசீச சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தல் பரப்புரைகளில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுவதை மறுத்துள்ளது.
வெளிப்பார்வைக்கு மசீச இடைத்தேர்தல் வேலைகளில் பங்கேற்காததுபோல் தெரியலாம் ஆனால், உண்மையில் மசீசவும் பங்கேற்றுள்ளது என பிஎன் துணைத் தலைவர் முகம்மட் ஹசான் கூறினார்.
“பிஎன் கட்சித் தலைவர்கள் இடைத் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் ஈடுபட்டிருப்பது வெளியில் தெரிவதில்லை. மைபிபி தலைவர் (மெக்லின் டி’குருஸ்), சிலாங்கூர் மஇகா தலைவர் ஆகியோர் வேலை செய்கிறார்கள்.
“மசீச அதன் சிலாங்கூர் தலைவரை இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை, அது கட்சியைத் திருத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அதன் தொடர்புத் தலைவர் நேற்றிரவு (வேட்பாளர் நியமனத்துக்கு) வந்திருந்தார்.
“எனவே, பிஎன் உறுப்புக் கட்சிகள் பங்கேற்கவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை”, என்றாரவர்.