சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தலில் ஒதுங்கிக் கொண்டது போல சிலாங்கூரின் இன்னொரு இடைத் தேர்தலும் பாஸ் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொள்ளலாம்.
அந்த விவகாரம் இன்னும் விவாதிக்கப்படு வந்த போதிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இந்த இடைத் தேர்தலிலும் பங்கேற்காமல் இருப்பதை விரும்புகின்றனர் என்று பாஸின் உதவித் தலைவர் முகமட் அமர் நிக் அப்துல்லா கூறினார்.
சுங்கை காண்டிஸைப் போலல்லாமல் பலாகோங்கில் குறைந்த அளவிலான மலாய் வாக்களர்களே இருக்கின்றனர். இது போட்டியிட வேண்டாம் என்ற நிலைப்பாட்டை வலுவாக்குகிறது என்று கோத்தா பாருவில் இன்று அவர் கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர் எடி இங் தியன் சீ காலமானத்தைத் தொடர்ந்து பலாகோங் தொகுதி காலியாக இருக்கிறது.
இந்த இடைத் தேர்தலில் மசீச அதன் சொந்தச் சின்னத்தின் கீழ் போட்டியிடக்கூடும் என்று அதன் தலைவர் லியோ தியோங் லாய் கூறினார்.
இத்தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்ட அவர், மசீச போட்டியிட வேண்டியது முக்கியமாகும் என்றார்.
பலாகோங் தொகுதி 2008 ஆம் ஆண்டில் டிஎபி கைப்பற்றும் வரையில் மசீசவின் சட்டமன்ற இருக்கையாக இருந்து வந்துள்ளது.