உங்கள் கருத்து: முன்பு பிஎன் நாடாளுமன்றம் வருவதில்லை, இப்போது ஹரப்பானா?

‘காலி  இருக்கைகள், அமைச்சர்கள்   எங்கே?’

கேகேஎஸ்எஸ்எஸ்:  நாடாளுமன்ற  அமர்வுகளுக்கு  முன்கூட்டியே   திட்டமிடப்படுகிறது.  அப்படி  இருக்கும்போது   அமைச்சர்கள்   கூட்டங்களில்  கலந்துகொள்ளாததற்குக்  காரணம்  இருக்க  முடியாது.

தயை    செய்து  நாடாளுமன்றக்  கூட்டங்களுக்கு   முன்னுரிமை  கொடுங்கள்.  அது   எம்பிகள்   மக்களின்   கோரிக்கைகளை  முன்வைக்கும்  இடமாகும்.

மற்ற  கூட்டங்களை   நாடாளுமன்றக்  கூட்டங்களுக்கு  அப்பாற்பட்ட   நேரங்களில்   வைத்துக்  கொள்ள  வேண்டும்.  முக்கியமான   சட்டவரைவுகள்மீது  வாக்கெடுப்பு   நடக்கும்போது  மட்டும்   நாடாளுமன்றம்  நிறைந்திருப்பதையும்  மற்ற   நேரங்களில்   காலியாக   இருப்பதையும்   காண  விரும்பவில்லை.

பெயரிலி1529020255: அமைச்சர்களுக்கும்  துணை  அமைச்சர்களுக்கும்  வேறு  முக்கியமான    வேலை   இருந்திருக்கும்,  அதுதான்   அவர்கள்   வராததற்குக்  காரணம்.

பிலேப்பர்புரோ:  தேர்தலுக்குமுன்  சுபாங்  எம்பி  வொங்  சென்,  பிஎன்  எம்பிகள்   அரிதாகவே   நாடாளுமன்றம்   வருகிறார்கள்   என்று  கூறியிருந்தார்.  இன்று   என்ன   நடக்கிறது?

பெயரிலி:  மலேசியாகினியில்   கருத்துரைப்போர்   எதற்கெடுத்தாலும்  அம்னோவை   குறை  சொல்லிக்கொண்டிருக்கக்  கூடாது.  ஹரப்பான்  முறையாக   நடந்து  கொண்டால்  அம்னோ  குறைகூருவதற்கு  இடமிருக்காது.

ஹரப்பான்  முன்மாதிரியாக    நடந்து  கொள்ள  வேண்டும்.

ரெம்பாவ்  எம்பி  கைரி  ஜமாலுடின்   தெரிவித்த   ஆலோசனை   நன்று.

எம்.மனோகரன்:  நாடாளுமன்ற   உறுப்பினர்கள்  கூட்டங்களுக்கு   வராதிருப்பது  வருத்தமளிக்கிறது.  நாடாளுமன்றக்  கூட்டங்கள்   முக்கியமானவை.  அங்குதான்   சட்டங்கள்   இயற்றப்படுகின்றன.

புதன்கிழமை   அமைச்சரவைக்  கூட்டங்களை  ஏன்  நாடாளுமன்றக்  கூட்டம்   இல்லாத   வெள்ளிக்கிழமைகளில்   வைத்துக்கொள்ளக்  கூடாது?

எச்சிலியோங்: ஹரப்பானுக்குத்தான்  எங்கள்  ஆதரவு. ஆனால்,  ஹரப்பான்  எம்பிகள்   முந்திய   அரசாங்கம்போல்   நாடாளுமன்றத்துக்கு  வராமல்  இருக்கக்கூடாது.  நீங்கள்  மக்களின்  பிரதிநிதிகள்.  நாடாளுமன்றத்தில்  காலி  இருக்கைகளைக்  காண   வருத்தமாக   உள்ளது.

கைரி  இப்போது   புத்த்சாலித்தனமாக   பேசுகிறார்.  அவர்  சொல்வதைக்   கேளுங்கள்.  நாடாளுமன்றக்  கூட்டமும்  அமைச்சரவைக்   கூட்டமும்   ஒரே  நேரத்தில்  நடத்தப்படக்கூடாது.

ஆர்ஆர்:  நாடாளுமன்றத்துக்கு   எம்பிகள்   வரவில்லை  என்றால்  குறைகூறப்படும்  என்பது   தெரிந்த   ஒன்றுதான்.  தெரிந்தும்  புதன்கிழமைகளில்   அமைச்சரவைக்  கூட்டத்தை   நடத்துவது   ஏன்?

நல்ல  ஆலோசனை  தெரிவித்த   கைரிக்கு   நன்றி.  நாடாளுமன்றக்  கூட்டங்களே  முக்கியமானவை.  எம்பிகள்  இனியும்   நாடாளுமன்றக்  கூட்டங்களுக்கு     வராமல்   இருக்கக்  கூடாது.

மேபல்சிரப்:  அமைச்சர்களோ  இல்லையோ   எல்லாருமே   நாடாளுமன்ற   உறுப்பினர்களாக    தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.  தத்தம்   தொகுதியைப்  பிரதிநிதித்து  அவர்கள்   நாடாளுமன்றக்   கூட்டங்களில்   கலந்துகொள்வது  அவசியம்.
‘மலேசியா  பாரு’வில்   பிஎன்   எம்பிகள்போல்   நடந்து  கொள்ளாதீர்கள்.

பெயரிலி 8231440077354:  ஹரப்பான்  கொறடா   சரியாக  நடந்து  கொள்ளாததுதான்  காரணமாகும்.  அமைச்சர்களும்   கட்சி   எம்பிகளும்   மக்களவைக்கு  வருவதை   அவர்  உறுதிப்படுத்த   வேண்டும்.