பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி எதையும் எளிதில் வெளியில் சொல்ல மாட்டார். கட்சித் தேர்தல் விசயத்திலும் அவர் அப்படித்தான்.
இன்று பிற்பகலில் நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவாரா என்று அவரிடம் வினவப்பட்டது. அதற்கு அவர் பொருளாதார விவகார அமைச்சர் என்ற முறையில் அளவுமீறி வேலை இருப்பதாகக் கூறினார்.
“வேலை அதிகம் அதனால் இன்னும் நான் முடிவெடுக்கவில்லை”, என்றாரவர்.
இப்போதைக்கு பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டியிட அன்வார் இப்ராகிம் மட்டுமே முன்வந்துள்ளார்.
அஸ்மின் துணைத் தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள போட்டியிடப்போவதாக இதுவரை கூறவில்லை என்பதால் அவர் அடுத்த மாதம் நடைபெறும் கட்சித் தேர்தலில் அன்வாரை எதிர்த்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என்று பேசப்படுகிறது.