பிரதமர் மகாதிர் தம்மால் முடிந்தால் ஒரு நாளைக்கு 36 மணி நேரம் வேலை செய்வேன் இன்று கூறினார்.
“முடிந்த அளவுக்கு எனது வேலை நேரத்தை நான் விரிவுப்படுத்துகிறேன். நான் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் வேலை செய்கிறேன்.
“கூடுதலான நேரத்தை ஒரு நாளுக்கு, ஒரு 36 மணி நேரத்தை, பெற முடியுமென்றால், நானும் 36 மணி நேரம் வேலை செய்வேன்”, என்று மகாதிர் நாடாளுமன்ற முகப்பறையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாடாளுமன்ற கூட்டங்களில் அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் ஆஜராகுவது அவருக்கு திருப்தி அளிக்கிறதா என்று அவரிடம் கேட்ட போது மகாதிர் இவ்வாறு கூறினார்.
இது வரையில் நாடாளுமன்ற கூட்டங்களில் அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் ஆஜராகியிருந்தது அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை மகாதிர் ஒப்புக்கொள்ளவில்லை.
நான் எதிலும் திருப்தி அடைந்ததே இல்லை. அவர்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்று நினைக்கிறேன். நாடாளுமன்றத்தில் ஆஜராகமல் இருப்பதற்கு அவர்களுக்கு சரியான காரணம் இருக்க வேண்டும் என்றாரவர்.