ஏர்செல்-மெக்சிஸ் வழக்கு தொடர்பில் கருத்துரைக்க இயலாது என்று மெக்சிஸ் பெர்ஹாட் இன்று தெரிவித்தது.
புர்சா மலேசியாவிடம் தாக்கல் செய்த ஆவணத்தில், அந்நிறுவனத்திடமிருந்து எந்தவொரு உத்தியோகப்பூர்வ ஆவணங்களையும் பெறவில்லை என்றும், அதற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றி தெரியாது என்றும் தொலைத் தொடர்பு சேவை வழங்குநரான மெக்சிஸ் மோபைல் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 18 பேரில், மெக்சிஸ் நிறுவனர் டி ஆனந்த கிருஷ்ணனும் ஒருவர் என்று முந்தைய அறிக்கை தெரிவித்தது.
இந்திய மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) கூற்றுப்படி, 2008-ம் ஆண்டு, ரூ18 கோடி (2.7 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள ஏர்செல் பங்குகளை, ஒரு பங்கு 10 ரூபாய் விலையில், மொத்தம் ரூ180 கோடியில் வாங்குவதற்கான ஒப்புதலுக்கு அனுமதி கோரி, மெக்சிஸ் விண்ணப்பித்ததாகத் தெரிகிறது.