சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாகிர் நாய்க் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்டிடிஇ) தொடர்பாக பல வாரங்கள் வசவுகளைப் பரிமாறிக்கொண்ட பெர்லிஸ் முப்தி அஸ்ரி சைனுல் அபிடினும் பினாங்கு துணை முதல்வர் II பி.இராமசாமியும் நேரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
அவர்கள் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய பிரதமர்துறை அமைச்சர் முஜாஹிட் யூசுப் ராவா முன்வந்துள்ளார். இம்மாதப் பிற்பகுதியில் புத்ரா ஜெயாவில் உள்ள அவரது அலுவலகத்தில் அவ்விருவரும் சந்திப்பார்கள் என்றவர் சொன்னார்.
“இரண்டு நாள்களுக்குமுன் இருவரையும் தொடர்புகொண்டேன்……இருவரும் ஒப்புக்கொண்ட நல்ல செய்தி இப்போதுதான் வந்தது. இருவரும் சந்தித்துப் பேசுவார்கள். நான் நடுவராக இருப்பேன்.
“அது இரு மூடிய-கதவுப் பேச்சுவார்த்தையாகத்தான் இருக்கும்…… கூட்டத்தை வெளிப்படையாக நடத்துவது நன்றாய் இராது”, என முஜாஹிட் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடத்தில் கூறினார்.