லியு: பொதுக் கணக்குக் குழு பதவிக்கு ஸாகிட் நியமிக்கப்படலாம்

 

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் (பிஎசி) பதவிக்கு எதிரணித் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் பெயர் பரவலாகப் பேசப்படுகிறது என்று நடப்பில் சட்ட அமைச்சர் லியு வுயி கியோங் இன்று கூறினார்.

குறிப்பாக ஸாகிட் இப்பதவிக்கு நியமிக்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்படுகிறதா என்று கேட்டதற்கு, ஒரே ஒருவர் மட்டும் ஆலோசிக்கப்பட்டு வருகிறார் என்றாரவர்.

எதிரணியிலிருந்து ஒரே ஒருவர் மட்டும் ஆலோசிக்கப்பட்டு வருகிறார். நீங்கள் சற்று முன்பு கூறிய அவர்தான். அவரின் பெயரை பல தடவைகள் சொல்ல வேண்டியதில்லை என்று நாடாளமன்ற முகப்பறையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

எதிரணித் தலைவர் பிஎசியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கை உறுதியளித்திருப்பதை அவர் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

ஆனால், அப்பதவியை ஏற்றுக்கொள்வதா என்பது ஸாகிட்டைப் பொறுத்தது என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத் தொடரில் தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்..