சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் தலைவர் பதவிவிலகல்: கட்சியில் ஜனநாயகம் செத்துவிட்டதாம்

சிலாங்கூர் பிகேஆர் இளைஞர்  தலைவர்   சைட்   பாட்லி     ஷா  சைட்   ஒஸ்மான்,   பல   தலைவர்களின்   ஆணவமும்   பாரபட்சமும்   மாநில   பிகேஆரில்  ஜனநாயக   உணர்வுகளைச்  சாகடித்து   விட்டதாக  கூறிப்   பதவி  விலகினார்.

இவ்விவகாரத்தில்   கட்சியின்   உயர்த்  தலைமைத்துவம்    தலையிட   வேண்டும்   என்று   கேட்டுக்கொண்ட  சைட்  பாட்லி,   கட்சியின்   தொகுதிகளில்   அரசியல்   நியமனங்கள்    செய்வதில்   பாகுபாடு   காட்டப்படுவதைக்   கண்டு    அதிருப்தி    அடைந்ததாகக்   கூறினார்.

தொகுதித்   தலைவர்கள்   அரசியல்  நியமனங்களைச்   செய்யும்போது     தகுதியானவர்களாக   அல்லாமல்   தங்களுக்கு  விசுவாசமானவர்களாக  பார்த்துத்தான்  நியமனம்    செய்கிறார்கள்  என்றாரவர்.

“தங்கள்    செல்வாக்கையும்   அதிகாரத்தையும்   திடப்படுத்திக்கொள்ளும்   நோக்கத்துடன்   அரசியல்  பதவிகளுக்கு    ஆள்களை  நியமிக்கும்   சிலாங்கூர்  பிகேஆர்    தலைவர்கள்  சிலரின்  போக்கைக்  கண்டிக்கிறேன்.

“குழு  உறுப்பினர்களை  முடிவு   செய்யும்போது   அவர்களின்  கல்வித்  தகுதி,  திறமை,  அனுபவம்,  கட்சிப்  போராட்டத்தில்    அவர்களின்   பங்களிப்பு   ஆகியவை  முக்கிய   தகுதிகளாக   இருப்பது   அவசியம்.  ஆனால்   இங்கு   நேர்மாறாக  நடந்திருக்கிறது”,  என்றவர்  சொன்னார்.