பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சித்திக் அப்துல் ரஹ்மான், சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் பெரிய அளவில் வெற்றிபெறுவது முக்கியம் என்றார். சிலாங்கூரில் வளர்ச்சிப் பணிகள் தொடர்வதை உறுதிப்படுத்துவதற்கு அது அவசியமாகும் என்றாரவர்.
தவறினால் அதுவே அம்னோவும் பாஸும் அடுத்த பொதுத் தேர்தலில் கைகோர்த்து அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும்.
“இந்த (சுங்கை கண்டீஸ்) இடைத் தேர்தல் முடிவு தனித்துவம் வாய்ந்தது. பாஸும் அம்னோவும் இதை ஒரு சோதனைக் களமாகப் பார்க்கின்றன.
“இங்கு (ஹரப்பான்) பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றால் அதுவே அடுத்த ஜிஇ-இல் அவை இரண்டும் ஹரப்பானை எதிர்ப்பதற்குக் கூட்டுச் சேர ஒரு வாய்ப்பாக அமைந்து விடும்”, என நேற்றிரவு கிள்ளானில் சைட் சித்திக் கூறினார்.