என்ஜிஒ-களின் மலாய்-முஸ்லிம் பேரணியில் பெர்சத்துவின் ரயிஸ் யாத்திம் அம்னோ, பாஸுடன் சேர்ந்து கொண்டார்

 

மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் மலாய் இனத்திற்கும் அவர்களின் சமயத்திற்கும் அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளை அழிப்பதற்காக முற்பட்டிருக்கும் பல தரப்பினர்களிடமிருந்து அவற்றை தற்காப்பதற்காக சுமார் 300 மலாய் அரசுசார்பற்ற அமைப்புகள் (என்ஜிஒ) 1,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் இன்று கூடியிருந்த பேரணியில் அம்னோ மற்றும் பாஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் கலந்து கொண்டவர்களில் முன்னாள் அமைச்சரும் தற்போது பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்த பெர்சத்து உறுப்பினருமான ரயிஸ் யாத்திமும் அடங்குவார்.

அப்பேரணியில் கலந்து கொண்ட இதர தலைவர்கள் – பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான், பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் நசாருடின் ஹசான், பாஸ் மத்தியச் செயற்குழு உறுப்பினர் நிக் அப்துல்லா நிக் அசிஸ், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் மற்றும் கூட்டரசுப் பிரதேச முன்னாள் இளைஞர் தலைவர் ராஸ்லான் ரபியி.

கோலாலம்பூர், கம்போங் பாரு, சுல்தான் சுலைமான் கிளப்பில் இன்று காலை நடைபெற்ற அந்தப் பேரணியில் ரயிஸ் யாத்திம்கூட உரையாற்றினார்.

முந்தைய பாரிசான் நேசனல் அரசாங்கத்தின் முன்னாள் சமூக-கலாச்சார ஆலோசகரான ரயிஸ் அவரது ஆவேசமான உரையில் சமீபத்தில் ஒன்றிணைக்கப்பட்ட சோதணை சான்றிதழுக்கு (யுஇசி) எதிராகத் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளை மீண்டும் குறிப்பிட்டார்.

ஒன்றுக்கு மேற்பட்ட அமைவுமுறைகளை (சோதணை முறைகள்) நாம் கொண்டிருக்க முடியாது. சிங்கப்பூரைப் பாருங்கள், இந்தோனேசியாவைப் பாருங்கள், இந்தியாவைப் பாருங்கள்.. இந்த நாடுகளில் எல்லாம் ஒரே ஒரு அமைவுமுறைதான் இருக்கிறது என்று கூறிய ரயிஸ் யாத்திம், நாம் ஏன் இரண்டு சோதணை அமைவுமுறைகளுக்கு ஈடுபாடு காட்ட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

காலை மணி 9.00 திலிருந்து, பல என்ஜிஒ-களின் தலைவர்கள் மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்களுக்கு எதிராகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் பற்றியும் அவற்றுக்கு தற்போதைய ஹரப்பான் அரசாங்கம் ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுவது பற்றியும் பேசினர்.