அம்னோ மக்களின் ஆதரவைப் பெற அதன் சொந்த கால்களில் நிற்க வேண்டும், பாஸின் உதவியையோ ஒத்துழைப்பையோ நம்பியிருக்கக் கூடாது என்கிறார் அம்னோ முன்னாள் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்.
சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் அம்னோவும் பாஸும் ஒத்துழைக்கும் சாத்தியம் உள்ளது என்றாlலும் அந்த ஒத்துழைப்பு தொடரக்கூடாது என்றாரவர்.
“பாஸ் (சுங்கை கண்டீஸ் இடைத்தேர்தலில்) போட்டியிடவில்லை என்பதால் இந்த ஒரு தடவை அதனுடன் ஒத்துழைப்பது பரவாயில்லை. ஆனால், வருங்காலத்தில் அது பற்றி ஆராய வேண்டும்”. கைரி, நேற்று இடைத் தேர்தலில் போட்டியிடும் பிஎன் வேட்பாளர் லொக்மான் நூர் ஆடாமுக்காகப் பரப்புரை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை லொக்மான், சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் பிஎன் வெற்றிபெற பாஸ் ஒத்துழைக்கும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். அது குறித்துக் கருத்துரைத்தபோதுதான் கைரி மேற்கண்டவாறு கூறினார்.