மஸ்லியை சாடியதற்காக மன்னிப்புக் கோரினார் டிஎபி பெர்சாம் பிரதிநிதி ஓங்

 

கல்வி அமைச்சராக மஸ்லி நியமிக்கப்பட்டிருப்பதை பிரதமர் மகாதிர் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறியதற்காக டிஎபி பெர்சாம் சட்டமன்ற உறுப்பினர் ஓங் பூன் பியாவ் மன்னிப்பு கோரியிருக்கிறார்.

“அந்த அறிக்கைக்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன்”, என்று ஓங் அவரது சேவை மையத்தின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சுயேட்சையான சீன உயர்நிலைப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என்று கல்வி அமைச்சர் மஸ்லி நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்திருந்த பதிலைத் தொடர்ந்து, ஓங் கல்வி அமைச்சர் மஸ்லியை சாடியிருந்தார்.

பின்னர், இதற்குப் பதில் அளித்த கல்வி அமைச்சர் மஸ்லி, அச்சீனப்பள்ளிகள் அரசாங்கப் பள்ளிக்கள் அல்ல, ஆகவே அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஆனால், மேம்பாட்டு செலவீனங்களுக்காக அளிக்கப்பட்டுள்ள சிறப்பு நிதியின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்றார்.

நிதி ஒதுக்கீடு தவிர, ஒன்றிணைக்கப்பட்ட சோதணை சான்றிதழை (யுஇசி) அங்கீகரிக்கும் விவகாரத்திலும் அமைச்சர் மஸ்லி அழுத்ததிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யுஇசிக்கு அங்கீகாரம் அளிப்பது பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கையின் ஓர் அங்கமாகும்.

ஆனால், எதிரணியினர், குறிப்பாக அம்னோ மற்றும் பாஸ், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.