அரசாங்கம் வெளிநாட்டுக் கார்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை மேலும் வலுப்படுத்த எண்ணுவதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
“வெளிநாட்டுக் கார்கள் எளிதாக நாட்டுக்குள் வருவதைத் தடுக்க நிபந்தனைகளை விதிக்கும் சாத்தியங்களை ஆராய வேண்டியுள்ளது”, என இன்று மக்களவையில் மகாதிர் கூறினார்.
“அது புரோட்டோனும் மற்ற தேசிய கார்களும் உள்நாட்டுச் சந்தையில் மேலாதிக்கம் செலுத்த வாய்ப்பளிக்கும். அது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது”, என்றாரவர்.