காணாமல் போய்விட்ட பாதிரியார் கோ, அம்ரி, ஹில்மிஸ் விவகாரத்தை தீவிரமாக ஆராய போலீஸுக்கு உத்தரவு, அமைச்சர் கூறுகிறார்

 

பாதிரியார் ரேமெண்ட் கோ, அம்ரி செ மாட், ஜோஸ்ஹுவா மற்று ரூத் ஹில்மி ஆகியோர் காணாமல் போன விவகாரத்தை மீண்டும் தீவிரமாக ஆராய்வதற்கு போலீஸுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று நடப்பில் சட்ட அமைச்சர் லியு வுய் கியோங் கூறினார்.

நமது சொந்த மக்கள் காணாமல் போனது மற்றும் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனது ஆகியவற்றை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய அமைச்சர், தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு என்ன ஆனது, உயிரோடு இருக்கிறீர்களா அல்லது இறந்து விட்டார்களா என்பது நமக்குத் தெரிந்தாக வேண்டும் என்றாரவர்.

அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கூற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்று அமைச்சர் லியு இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த புதிய விசாரணைக்கான முன்னெடுப்புகளை போலீசார் மேற்கொண்டு விட்டனரா என்ற கேள்விக்கு, விசாரணையை எப்படி நடத்த வேண்டும் என்பதை போலீசிடமே விட்டு விடுவாதாகக் கூறிய அமைச்சர், அவர்கள் புதிய விசாரணைக்கானவற்றை இன்னும் செய்யாதிருந்தால், “என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரிய வேண்டும்”, என்று அமைச்சர் கூறினார்.

கோ கடந்த ஆண்டு பெப்ரவரி 13 லும், அம்ரி மற்றும் ஜோஸ்ஹுவாவும் ஹில்மியும் நவம்பர் 2016 இல் கடத்தப்பட்டனர்.