அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளிதழை இனிமேல் வாங்கக் கூடாது என்று கல்வி அமைச்சு அதன் அதிகாரத்திற்குட்பட்ட பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர கல்வி நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்கின் சிறப்பு ஆலோசகர் வான் சைபுல் வான் ஜான் மூலம் இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஜாலை 18 தேதி இடப்பட்ட இந்த குறிப்பு கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் முகமட் கஜாலி அபாஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்பு கொண்ட போது அமைச்சின் அதிகாரி ஒருவர் அந்தக் குறிப்பின் உண்மையை உறுதிப்படுத்தினார்.
தமது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசிய அவர், இதர நாளிதழ்களையும் நிறுத்துவது பற்றி அமைச்சு ஆலோசித்து வருவதாக கூறினார்.
இது செலவைக் குறைப்பதற்கான ஒரு வழி என்று கூறிய அவர், இப்போதெல்லாம் அதே செய்திகளை ஓன்லைன் வழியாகப் பெறலாம் என்றார்.
சமீபகாலமாக நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த உத்துசான் மலேசியாவுக்கு அரசாங்க ஆதரவு இருந்தது.
ஆனால், அம்னோவின் தலைமையிலான பிஎன் அரசு 14 ஆவது பொதுத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது.