பினாங்கு: 40 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

14 ஆவது மாநில சட்டமன்றத்தின் முதலாவது தவணைக் கூட்டத்தில் இன்று 40 சட்டமன்ற உறுப்பினர்கள், மூன்று எதிரணி உறுப்பினர்கள் உட்பட, பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் சௌ கோன் இயோவ், துணை முதலமைச்சர் 1 அஹமட் ஸாக்கியுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் துணை முதலமச்சர் 2 பி. இராமசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.

சட்டமன்ற தலைவராக இரண்டாவது தவணை பதவி ஏற்றுள்ள லா சூ கியாங் இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றிருந்தார்.

சுங்கை பாகாப் சட்டமன்ற உறுப்பினர் அமர் பிரிட்பால் அப்துல்லா துணை சட்டமன்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பினாங்கு சட்டமன்றத்தின் எதிரணித் தலைவராக அம்னோ சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் யுசோப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், தற்போது மலேசிய நிதி அமைச்சர், சட்டமன்றத்தின் பின்னிருக்கையில் அமர்கிறார்.