பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் அமைச்சரவைக் கேள்விக்கு, உள்ளாடை நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்பைப் பற்றி பேசும் அஸ்மின், கசானா நேசனல் பெர்ஹாட்-இன் RM6 பில்லியன் இலாபத்தைப் புறக்கணித்துவிட்டார் என்று, பெக்கான் எம்பி நஜிப் இராசாக் பதிலளித்தார்.
முன்னாள் பிரதமருமான அவர், கசானா உலகம் முழுவதும் பல்வேறு முதலீடுகளைச் செய்துள்ளது என்றார். அதன் விளைவாக, காசானா அலிபாபா நிறுவனத்திலிருந்து RM6 பில்லியன் வருவாய் உள்ளிட்ட பல பில்லியன் கணக்கான இலாபத்தை ஈட்டியுள்ளது என்றார் நஜிப்.
“நாட்டின் 4-வது பிரதமராக டாக்டர் மகாதீர் இருந்த காலகட்டத்தில், மலேசியா ஏர்லைன்ஸ் போன்ற பல முதலீடுகளில் ஏற்பட்ட பில்லியன் கணக்கான இழப்புகள் பற்றி எப்படி?” என நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் நஜிப் கேள்வி எழுப்பினார்.
நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்த நஜிப், நேற்று டெவான் ராக்யாட்டில் அஸ்மின் வெளிப்படுத்தியக் கேள்விக்கு விடையளிக்கும் வகையில் அந்த அறிக்கையை வெளியிட்டார்.