ஸ்ரீசித்தியாவில் பிஎன் போட்டி இடாது, பாஸ் போட்டியிடும்

ஸ்ரீசித்தியா  இடைத்   தேர்தலில்   பாஸ்   போட்டியிட  இடமளித்து  பிஎன்   ஒதுங்கிக்  கொள்ளும்.

பாஸ்   சுங்கை  கண்டீஸ்   இடைத்  தேர்தலில்    போட்டியிடும்   வாய்ப்பை  அம்னோவுக்கு  விட்டுக்கொடுத்தது,   அதற்குக்  கைம்மாறுதான்   இது   என  பிஎன்  கூட்டணியின்   உதவித்   தலைவர்  முகம்மட்  ஹசான்   கூறினார்.

“ஸ்ரீசித்தியாவில்  பாஸ்   போட்டியிட   இடமளித்து   பிஎன்  அல்லது  அம்னோ   ஒதுங்கிக்கொள்ளும்    என்பதை   அறிவித்துக் கொள்கிறேன்”,  என  அம்னோ  துணைத்    தலைவருமான   முகம்மட்    கோத்தா  ராஜா  அம்னோ  அலுவலகத்தில்  கூறினார்.

ஸ்ரீசித்தியா   சட்டமன்ற    உறுப்பினர்   ஷஹாருடின்   படாருடின்   புற்று  நோயின்  காரணமாக    நேற்று   காலமானதை   அடுத்து   அத்தொகுதி   காலியானது.

அம்னோ   ஸ்ரீசித்தியாவில்   போட்டியிடவில்லை  என்றாலும்   அதுவும்   பிஎன்னும்   அத்தொகுதி   வாக்காளர்களைக்  கவர்வதற்கு  முழுமூச்சாக   பாடுபடும்    என்று   முகம்மட்   கூறினார்.

சிலாங்கூர்  சட்டமன்றத்தில்   ஸ்ரீசித்தியா  பிரதிநிதியாகக்    குரல்  கொடுக்க   பாஸ்  பொருத்தமான   ஒருவரைத்   தேர்ந்தெடுக்கும்   என   எதிர்பார்ப்பதாக   அவர்  சொன்னார்.

“பாஸ்  அம்னோவுக்குமிடையிலான   ‘புரிந்துணர்வு’க்கு   இது  ஒரு   தொடக்கம்தான். இன்ஷா  அல்லா,  இது  மேலும்  விரிவடையும்”.

பாஸும்  அம்னோவும்  ஒன்றுக்கொன்று   உதவிக்கொள்வதை  மலேசியாவில்   ஒரு  புதிய   அரசியலின்  விடியலாக   மக்கள்   எடுத்துக்கொள்ள   வேண்டும்  என்று   முகம்மட்  விரும்புகிறார்.