சட்டவிரோத தொழிலாளர்களை வைத்திருந்த ராஜ் வாழை இலை உணவகத்துக்கு ரிம5ஆயிரம் அபராதம்

இன்று    கோலாலும்பூர்   மெஜிஸ்திரேட்   நீதிமன்றம்    பங்சார்   ராஜ்   வாழை  இலை  உணவகத்தின்   நிர்வாக   இயக்குனருக்கு  இந்தியாவைச்   சேர்ந்த    இரண்டு   தொழிலாளர்களைத்   தொழிலாளர்  துறைக்குத்   தெரியப்படுத்தாமல்   வேலைக்கு  வைத்திருந்ததற்காக  ரிம5,000  அபராதம்  விதித்தது.

அவ்விரு    தொழிலாளர்களும்   சாலையில் தேங்கிய நீரைக் கொண்டு தட்டுகளைக் கழுவவது போன்ற புகைப்படங்களும் காணொளியும்   மே   மாதம்   சமூக ஊடகங்களில்   வைரலாகின.

அவ்விருவரையும்   தொழிலாளர்  துறைக்குத்   தெரியாமல்    வேலைக்கு  வைத்திருந்ததாகக்  கூறும்   இரு  குற்றச்சாட்டுகளை  இண்டர்கொம்பாஸ் (அந்த  உணவகம்  இந்த  நிறுவனத்துக்குச்  சொந்தமானது)  இயக்குனர்க்களில்  ஒருவரான   முகம்மட்  ரிஸால்  அப்துல்  ரகிம்,40,  ஒப்புக்கொண்டார்.  இவ்வாண்டு  ஜனவரி  22-இல்  அக்குற்றம்  புரியப்பட்டது.

ஒவ்வொரு  குற்றச்சாட்டுக்கும்   மெஜிஸ்திரேட்   வொங்  சாய்   சிம்,   தலா
ரிம2,500  ரிங்கிட்  அபராதம்  விதித்தார்.  அபராதத்தைக்  கட்டத்   தவறினால்  இரண்டு  மாதம்   சிறை  செல்ல  நேரும்.

இந்த  வழக்கு  தவிர   அந்நிறுவனம்  குடிநுழைவுத்  துறை,  சுகாதாரத்  துறை   ஆகியவற்றின்   வழக்குகளையும்  சந்திக்க   வேண்டியிருக்கும்   எனத்   தெரிகிறது.