அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி, சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் வெற்றி பெற்றது. 5,842 வாக்குகள் பெரும்பான்மையில் பிகேஆர் அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டது.
வெற்றி பெற்ற பிகேஆர் வேட்பாளர் முகமட் ஸவாவி அஹமட் முகினி 15,427 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்து பிஎன் வேட்பாளர் லோக்மான் அடாம் 9,585 வாக்குகளையும், சுயேட்சை வேட்பாளர் கே. மூர்த்தி 97 வாக்குகளயும் பெற்றனர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத் தேர்தலில் 49.4 விழுக்காடு சுங்கை காண்டிஸ் வாக்களர்களே வாக்களித்தனர்.
பிகேஆரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாட் ஷுஹைமி ஷாபியே காலமானத் தொடர்ந்து சுங்கை மாண்டிஸ் இருக்கை காலியானது.
மே 9 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஷுஹைமி இத்தொகுதியில் 12,480 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.