இகுவானிமிட்டி உல்லாசப் படகு பறிமுதல்: ஜோவின் வழக்குரைஞர் மகாதிரை சாடுகிறார்

 

இந்தோனேசியா 1எம்டிபி தொடர்புடைய உல்லாசப் படகு இகுவானிமிட்டியை மலேசியாவிடம் ஒப்படைக்கும் திட்டம் பற்றி வணிகர் ஜோ லோவின் வழக்குரைஞர் பிரதமர் மகாதிரை சாட்டியுள்ளார்.

ஜேம்ஸ் எப் ஹேகெர்டி என்ற அந்த வழக்குரைஞர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் அந்தப் படகை இன்னொரு இடத்திற்கு மாற்றுவது இந்தோனேசியா மற்றும் யுஎஸ் ஆகிய நாடுகளின் நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு முரணானது என்று கூறுகிறார்.

சட்டவிரோதமாக அந்தச் சொத்தை எடுத்துக்கொள்ளும் மகாதிரின் அரசாங்க நடவடிக்கை எவ்வலவு சீக்கிரமாக சட்ட ஆளுமை மகாதிரின் ஆட்சியில் காணாமல் போய்விடுகிறது என்பதைக் காட்டுகிறது என்று கூறும் ஹேகெர்டி, 1988 இல் மலேசிய தலைமை நீதிபதி சாலே அபாஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டுகிறார்.

மேலும், மலேசிய அரசாங்கத்தின் இந்த சட்டவிரோதமான பறிமுதல் அவரது கட்சிக்காரர் ஜோ லோ ஊடகங்களின் செய்தி சேகரிப்புக்கு ஆளாவார் என்று அந்த வழக்குரைஞர் கூறுகிறார்.

இதனிடையே, இகுவானிமிட்டி உல்லாசப் படகை மலேசியாவிடம் ஒப்படைப்பது அடுத்த வாரம் நடைபெறலாம் என்று எதிர்பார்ப்பதாக இந்தோனேசிய போலீஸ் மலேசியாகினியிடம் கூறியது.