அரசியல் நியமனங்களான அரச தந்திரிகள் அறுவரின் சேவை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார்.
ஸஹ்ரின் முகம்மட் ஹஷிம்( இந்தோனேசிய தூதர்), பெர்னார்ட் கிலோக் டொம்போக்( வத்திகன் தூதர்), பிளாஞ்சே ஓ’லியரி(பின்லாந்து தூதர்), குலாம் ஜெலானி கனிஸாம் (புருணைக்கான உயர் ஆணையர்), அடிலின் லியோங் (தைவானில் மலேசிய நட்புறவு மற்றும் வணிக மையத் தலைவர்), சியோ சென் பின்( குன்மிங் துணைத் தூதர்) ஆகியோரே அவ்வறுவருமாவர்.
ஸஹ்ரின் அம்னோ அரசியல்வாதி, சிறிது காலம் பிகேஆரிலும் இருந்துள்ளார். டொம்போக் ஐக்கிய பாசோக்மொமொகுன் கடாசான் டூசுன் மூருட் (உப்கோ) அமைப்பின் முன்னாள் தலைவர்.
ஓ’லியரி பிபிபி தலைவர் எம். கேவியெஸ்ஸின் துணைவியார், லியோங் சாபாவைச் சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரி, சியோ மசீச அரசியல்வாதி.
மேலும் இருவர்- சுல்ஹஸ்னான் ரபிக், ஹசான் மாலெக், இருவரும் அம்னோவைச் சேர்ந்தவர்கள்- அமெரிக்கா, கம்போடியா தூதர்களாக இருந்தவர்கள் தாங்களாகவே விலகிக் கொண்டார்கள்.
லாபிஸ் எம்பி பாங் ஹொக் லியோங் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது சைபுடின் இவ்விவரங்களை வெளியிட்டார்.