ஊடகங்கள் எதிர்வரும் பலாக்கோங் இடைத் தேர்தலில் டிஏபி வேட்பாளராகும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அஸ்ட்ரோ ஏஇசி ஒலிபரப்பாளர் யுன்னா டான்மீது மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்துவது நியாயமற்ற செயல் என சிலாங்கூர் டிஏபி தலைவர் இயன் யோங் கூறினார்.
அங்கு வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு வேறு சிலரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வந்தாலும், டான் பிரபலமானவர் என்பதால் அவர்மீது மட்டுமே தனிக் கவனம் செலுத்தப்படுவதாக இயன் யோங் கூறினார்.
“ஊடகங்களின் கவனம் அவர்மீது மட்டுமே இருப்பதால் கட்சியின் மத்திய தலைமை டானை மட்டுமே களமிறக்க எண்ணுவதாக அடிநிலை உறுப்பினர்கள் தவறாக நினைத்து விடக்கூடும்.
“அதனால் ஊடகங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்”, என்று இயன் யோங் கேட்டுக்கொண்டார்.
வேட்பாளராகக் களமிறக்கப்படும் வாய்ப்புள்ள மற்றவர்களின் பெயர்களைத் தெரிவிக்க இயன் யோங் மறுத்தார். தேர்வுக் குழுவில் தான் இல்லை என்பதால் அதற்கான உரிமை தனக்கில்லை என்றார்.