செலயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் அவரது நாடாளுமன்ற இருக்கையை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு விட்டுக் கொடுக்கத் தயார் என்கிறார்.
அன்வாரின் துணைவியார் வான் அசிஸா வான் இஸ்மாயில் மற்றும் அவரது மகள் நூருல் இஸ்ஸா தங்களுடைய முறையே பாண்டான் மற்றும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இருக்கைகளை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று கூறியிருந்ததைத் தொடர்ந்து வில்லியம் தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.
பேரரசர் சுல்தான் முகம்மட் V அளித்த மன்னிப்பைத் தொடர்ந்து மே 16 இல் அன்வார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இப்போது பிகேஆரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 70 வயது அன்வார் நாடாளுமன்றத்திற்கு திரும்ப விரும்புகிறார்.