உல்லாசப் படகு இகுவானிமிட்டி மலேசிய கடற்பகுதிக்கு திரும்பி வந்துள்ளது. இது பக்கத்தான் அரசு அதிகாரத்திற்கு வந்த பின் முதன்முறையாக நடந்துள்ளது.
கப்பல்களைக் கண்காணிக்கும் வலைத்தளம் பைன்டர் தகவல்படி, இகுவானிமிட்டி இன்று மாலை மணி 5.21க்கும் 5.29க்கும் இடையில் மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான கடல் எல்லையை பாத்தாமிலிருந்து கடந்து வந்தது.
பாத்தாமிலிருந்து அப்படகிற்கு கடற்போலீஸ் கப்பல் கெபிடி செத்தியா பாதுகாப்பாக வந்தது. இரு கப்பல்களும் ஜோகூர், பெங்கராங் கடற்கரையில் இரண்டு கடல் மைல்களுக்கு அப்பால் மாலை மணி 6.00 அளவில் நங்கூரமிட்டன.
இன்று முன்னஏரத்தில், இகுவானிமிட்டி நாளை போர்ட் கிள்ளான் வந்தடையும் என்று கூறப்பட்டது.