உல்லாசப் படகு இகுவானிமிட்டி இன்று போர்ட் கிள்ளான், பவுஸ்டெட் குருஸ் சென்டரில் நங்கூரமிட்டுள்ளது.
இன்று மதியம் 12.25 அளவில் அப்படகு அங்கு காணப்பட்டது. அதற்குப் பாதுகாப்பாக கடற்போலீஸ் கப்பல் இருந்தது.
அப்படகை அங்கு கண்ட செய்தியாளர் ஒருவர், “நீரின் மீது அது ரிம1 பில்லியன்”, மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
இகுவானிமிட்டியின் கொடிக் கம்பத்தில் மலேசியக் கொடி ஏற்றப்படுவது காணப்பட்டது.
அப்படகு அங்கு வந்தடைந்த போது, கிட்டத்தட்ட ஒரு டஜன் சட்டத் துறை அலுவலக (ஏஜி) அதிகாரிகள் போலீஸ் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் அப்படகை நோக்கிச் சென்றனர்.
ஏஜி அதிகாரிகள் அப்படகை சோதணையிடுவதுடன் அது அதிகாப்பூர்வமாக பறிமுதல் செய்யப்படுவதை அரசாங்கத்தில் சார்பில் கண்காணிப்பர் என்று மலேசியாகினி அறிந்துள்ளது.
படகிற்குள் செல்ல ஊடகத்தினர் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தூரத்திலிருந்து அங்கு நடப்பதைப் பார்த்தனர்.
But where is the culprit?
இந்தக் கப்பலை கண்காட்சி கூடமாக மாற்றி டிக்கெட் 20 முதல் 50 வரை வசூல் செய்தால் 1எம்டிபி கடனை அடைத்து விடலாம்.