நஜிப் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் எம்எசிசி அலுவலகத்திலிருந்து வெளியேறினார்

 

முன்னாள் பிரதமர் நஜிப் இன்று மாலை மணி 5.00 அளவில் கோலாலம்பூர் எம்எசிசி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

நாளை அவர் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான அறிவிப்புகளை அவர் பெறுவார் என்று தெரிகிறது.

அவரது வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் எம்எசிசி அலுவலகத்திற்கு நஜிப் மாலை மணி 5.00 வந்தார். ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டத்தை பார்க்க முடிந்தது.

நாளை காலை கோலாலம்பூரில் அவருக்கு எதிராக குறைந்தபட்சம் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று பெயர் கூற விரும்பாத ஒரு வட்டாரம் கூறியது.

இதற்கு முன்னர் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சம்பந்தமாக நாளை நஜிப் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இருக்க வேண்டும்.

1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேசன் செண்ட். பெர்ஹாட் சம்பந்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கு நஜிப் விசாரணை கோரியுள்ளார்.

நஜிப்புக்கு எதிராக நாளை சுமத்தப்படவிருக்கும் புதிய குற்றச்சாட்டுகளும் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் சம்பந்தப்பட்டவையாகும்.