எஸ்ஆர்சி இண்டர்நேசனல் பெர்ஹாட்டுடன் தொடர்புள்ள குற்றச்சாட்டுகள் மீதான ஆவணங்களைக் கொடுக்க அரசுத் தரப்பு மூன்று வாரங்கள் எடுத்துக்கொண்டது அது வழக்கை நடத்தத் தயாராக இல்லை என்பதைக் காண்பிப்பதாக முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வழக்குரைஞர் சாடினார்.
எதிர்த்தரப்பு மூன்று முறை கேட்ட பிறகு அரசுத் தரப்பு இன்று காலைதான் ஆவணங்களைக் கொடுத்தது.
“பல வாரங்களாக (ஆவணங்களைக் கேட்டுக்கொண்டிருந்தோம்). ஆவணங்கள் தயாராகி நீண்ட காலமாயிற்று என்றார்கள். ஆனால், இன்றுதான் கொடுத்தார்கள்.
“அதனால்தான் நீதிபதியிடம் வழக்குக்கான தேதிகளை அவசரப்பட்டு நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஏனென்றால் , நாங்கள் இந்த ஆவணங்களைப் படித்துப் பார்க்க வேண்டியுள்ளது…”என கோலாலும்பூரில் உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அரசுத்தரப்பிடம் உள்ள ஆதாரங்களைத் தெரிந்து கொள்ளும் உரிமை குற்றம் சாட்டப்பட்டவருக்கு உண்டு, அவர் எதிர்வாதம் செய்ய அது தேவை என்று ஷாபி கூறினார்.