தென்கிழக்காசியாவில் இராணுவ வலிமை பெற்ற நாடுகள் என்று பார்த்தால் மலேசியாவுக்குக் கடைசி இடம்தான் என்கிறார் தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபு.
“ஆகாயப் படை, கடல் படை, என்று எதை வைத்துப் பார்த்தாலும் நமக்குக் கடைசி இடம்தான். வியட்நாம் நம்மைவிட மேலான இடத்தில் உள்ளது. இந்தோனேசியாதான் முதலிடத்தில்”, என்று அமைச்சர் மக்களவையில் கூறினார்.
1970களில் மலேசியா முன்னணியில் இருந்தது என்றுரைத்த முகம்மட் சாபு இப்போதைய நிலையை நினைக்கவே சங்கடமாக உள்ளது என்றார்.
“மலேசியாவை மீண்டும் முதல்நிலைக்கு கொண்டுசெல்ல பாடுபடுவேன்”, என்றாரவர்.
டேனியல் பாலகோபால் அப்துல்லா (ஹரப்பான் -போர்ட் டிக்சன்)வின் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் அவ்வாறு கூறினார்.