காணாமல் போன ஜிஎஸ்டி திருப்பிக் கொடுப்பதற்கான தொகை பற்றி இர்வான் செரிகர் எம்எசிசியிடம் புகார் செய்துள்ளார்

 

திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை ரிம18 பில்லியன் காணாமல் போய்விட்டது என்று கூறப்படுவது பற்றி கருவூலகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகம்ட் இர்வின் செரிகர் அப்துல்லா இன்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் (எம்எசிசி) புகார் செய்துள்ளார்.

அவர் காலை மணி 9.30 லிருந்து இரண்டு மணி நேரத்திற்கு எம்எசிசி தலைமையகத்தில் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இர்வான், உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக தாம் இப்புகாரைச் செய்ததாகவும், ஏனென்றால் ரிம18 பில்லியன் காணவில்லை என்ற குற்றச்சாட்டிற்றிக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்றாரவர்.

கடந்த புதன்கிழமை, நிதி அமைச்சர் லிம் குவான் எங் ஜிஎஸ்டி வணிகர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய ரிம19.4 பில்லியனில் ரிம18 பில்லியன் பற்றாக்குறை இருப்பதாக கூறியிருந்தார். அக்குற்றச்சாட்டை இர்வான் நேற்று மறுத்திருந்தார்.

இன்று பின்னேரத்தில் தாம் போலீஸ் புகார் செய்யப் போவதாகவும் இர்வான் மேலும் கூறினார்.