மாரா பற்றிய அறிக்கைகள் விடுவதில் கவனமாக இருங்கள், அமைச்சர்களுக்கு மகாதிர் எச்சரிக்கை

 

மாரா பற்றி ஏராளமான அறிக்கைகள் விடப்பட்டுள்ளன. அவை மக்களின் கவனத்தை ஈற்றுள்ளன. அமைச்சர்கள் மாரா குறித்து வெளியிடும் அறிக்கைகளின் மீது கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மகாதிர் அமைச்சர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.

அவ்வறிக்கைகள் உணர்ச்சிகரமான விவகாரங்களாகியுள்ளன. அவை குறித்து பெர்சத்துவும் பக்கத்தான் ஹரப்பானும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

மக்களின் கருத்துகளுக்கு கவனம் செலுத்த வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதை தாம் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டுவரப் போவதாக அவர் தெரிவித்தார்.

மக்களின் ஆதரவைத் தொடர்ந்து பெறுவதற்கு அவர்களின் கருத்துகள் மீது அக்கறை காட்ட வேண்டும் என்ரு நேற்றிரவு பெர்சத்து உச்சநிலை தவைவர்களின் கூட்டத்திற்ற்குப் பின்னார் மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது தொடர்பாக, அரசாங்கம் ஜப்பானியர்களின் பண்பாட்டை, குறிப்பாக சிறப்புமிக்க நாட்டை உருவாக்குவதில், மிக்க ஆர்வத்துடன் பின்பற்ற விரும்புகிறது. அந்நாட்டு மக்கள் அவர்களின் செயல்பாடுகளில் மிக உயர்ந்த நன்னெறிகளைக் கொண்டிருக்கின்றனர் என்று மகாதிர் கூறினார்.

ஆனால், இங்கே நாம் அதை நிச்சயமாக செய்ய முடியாது. பெரும்பாலான நமது இளைஞர்கள் கற்பதிலும், உழைப்பதிலும் அக்கறை கொள்ளவில்லை. அவர்களின் ஈடுபாடுகள் மாட் ரெம்பிட் ஆவதிலும் உருப்படியற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும்தான் இருக்கின்றன என்று இடித்துக்கூறிய பிரதமர் மகாதிர், “இந்தப் பிரச்சனையை நாம் தீர்க்க வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.

இப்பிரச்சனையிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம் ஒரு வழி காண வேண்டும், நாட்டின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்க நமது கல்வி அமைவுமுறையை சீர்படுத்துவது உட்பட, என்றாரவர்.

குறைந்தபட்ச சம்பளம்

குறைந்தபட்ச சம்பளம் அமலாக்கம் செய்வது பற்றி குறிப்பிட்ட அவர், அது படிப்படியாகச் செய்யப்படும் என்றார்.

வருமானம் உயரும் போது உற்பத்தித்திறனும் உயர்ந்தாக வேண்டும். சம்பள உயர்வுடன் உற்பத்தித்திறனும் உயர்வதை நாம் உறுதி செய்தாக வேண்டும் என்று கூறிய மகாதிர், மிக அதிகமான வாழ்க்கைச் செலவினம் நமக்கு வேண்டாம் என்றும் கூறினார்.