பிரதமர் இலாகாவில் ரிம3.5 மில்லியன் கொள்ளையிட்ட 17 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்

 

பிரதமர் இலாகாவில் 14 ஆவது பொதுத்தேர்தலுக்காக வைத்திருந்ததாக நம்பப்படும் ரிம3.5 மில்லியனை கொள்ளையிட்ட அந்த இலாகாவின் 17 பாதுகாப்பு பணியாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று காலை 15 பேர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மற்ற இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த 17 பேரும் கடந்த ஆகஸ்ட் 7 இல் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) கைது செய்யப்பட்டனர்.

இந்த கொள்ளையர் கூட்டத்தில் ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி மற்றும் 16 பாதுகாவலர்கள் அடங்கியுள்ளனர். இவர்களிடமிருந்து கடந்த ஆகஸ்ட் 10 இல் எம்எசிசி ரிம1.9 மில்லையனை ரொக்கமாகக் கைப்பற்றியது. மேலும், பல கார்கள், மோட்டோர்சைக்கள்கள் மற்றும் இதர பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

மலேசியாகினிக்கு வட்டாரங்கள் அளித்தத் தகவல்படி, பொதுத்தேர்தல் நடந்த இரவில், பிஎன் தோற்கப் போகிறது என்று தெரிந்ததும், இவர்கள் முன்னாள் பிரதமர் நஜிப்பின் அலுவலகத்திற்குள் நுழைந்து ரிம3.5 மில்லியனை அடித்துச் சென்றனர்.

அந்தப் பணம் அம்னோவின் தேர்தல் செலவுகளுக்கானது என்று எம்எசிசி நம்புகிறது.

நஜிப்பும்கூட அப்பணம் அம்னோவுக்குச் சொந்தமானது என்று பின்னர் கூறிக்கொண்டார்.