டிஎபி தலைவர் சீனாவுக்கான புதிய சிறப்புத் தூதர்

 

சைனா பிரஸ் அறிக்கையின்படி, டிஎபி தலைவர் டான் கோக் வை சீனாவுக்கான புதிய சிறப்புத் தூதர்.

டான் இதை உறுதிப்படுத்தியதாக அந்தச் சீன நாளிதழ் கூறுகிறது. அவரது நியமனம் ஆகஸ்ட் 1 லிருந்து தொடங்குகிறது.

முந்தைய பிஎன் அரசாங்கத்தின் கீழ் மசீச முன்னாள் தலைவர் ஓங் கா திங் சீனாவுக்கான சிறப்புத் தூதராக இருந்தார். அவரின் இடத்தில் டான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெய்ஜிங் மற்றும் புத்ரா ஜெயாவுடான உறவுகளை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக டான் கூறினார்.

பொருளாதாரமோ கலாச்சாரமோ, மலேசியாவுக்கும் சீனாவுக்கும் நீண்டகால உறவு இருக்கிறது. ஆகவே தமது பதவிக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது என்று அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் சில கொள்கைப் பிணக்குகள் இருக்கும் வேளையில் டானின் நியமனம் வந்துள்ளது.

இவ்வாரம் பிரதமர் மகாதிர் சீனாவுக்கு வருகையளிக்கிறார். அவருடன் டான் கோக் வை செல்வார் என்று ஓர் அரசாங்க வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது.